Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2000 ரூபாய் சம்பளத்தில் நடிக்கும் கமல் மாஜி மனைவி சரிகா

12 மே, 2022 - 15:49 IST
எழுத்தின் அளவு:
Kamal-former-wife-Sarika-Ran-Out-Of-Money-During-Lockdown-:-she-earns-2000-rupee

கமல்ஹாசன் சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பாதித்து கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசனின் மகள்களும் திரைப்படங்களில் நடித்து இலட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். கமல்ஹாசனின் முன்னாள் மனைவியும் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசனின் தாயாருமான சரிகா ஒரு நாளைக்கு 2000 - 2700 ரூபாய்க்கு நடித்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகை சரிகாவை காதலித்து கடந்த 1998ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் கமல்ஹாசன். இந்த தம்பதிக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய மகள்கள் பிறந்தார்கள். இந்நிலையில் 2004ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கமல்ஹாசனை விவாகரத்து செய்த சரிகா, அதன் பின்னரும் ஒரு சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போதும் சில திரைப்படங்கள் மற்றும் ஓடிடி வெப்தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‛‛தினமும் காலையில் எழுகிறோம், வேலை செய்கிறோம், தூங்குகிறோம். வாழ்க்கையை வீணடிப்பதாகவே நினைத்தேன். அதனால் ஒரு வருடம் ஓய்வு எடுத்துக் கொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்க முடிவு செய்தேன். புதிதாக ஒன்றை செய்ய நினைத்தேன். திடீரென லாக்டவுன் வந்ததது. கையில் பணமில்லை. அந்த சமயத்தில் நாடகங்களில் நடித்து நாள் ஒன்றுக்கு ரூ.2000 முதல் ரூ.2700 வரை சம்பாதித்தேன். இது மிகவும் கவனத்துடன் எடுக்கப்பட்ட முடிவு. ஒரு வருடம் ஆகும் என்று நான் நினைத்தேன், ஆனால் அது ஐந்து வருடங்கள் ஆனது. அந்த ஐந்து வருடங்கள் நன்றாக இருந்தன'' என தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரு வெப்சீரிஸில் சரிகா நடித்து வருகிறார். இது தவிர சில படங்களிலும் நடிக்க கமிட்டாகி உள்ளார். கமலின் மகள்கள் திரைப்படத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்து கொண்டிருக்கும் நிலையில் அவரது தாயார் 2000 ரூபாய்க்கு ஏன் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இசை விருந்தளிக்கும் இளையராஜாபிறந்தநாளில் ரசிகர்களுக்கு இசை ... கமலின் விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா கமலின் விக்ரம் படத்தில் சிறப்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Vijay D Ratnam - Chennai,இந்தியா
15 மே, 2022 - 18:30 Report Abuse
Vijay D Ratnam 2005 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் சரிகா. இந்திய சினிமாவின் ஐகான் என்று சொல்லப்படும் கமல்ஹாசன், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் ஐம்பத்துக்கும் மேற்பட்ட சொந்தப்படங்கள் எடுத்தவர், எடுபவர் அவரது முன்னாள் மனைவியும், இன்றைக்கு கோடிகளில் சம்பளம் பெரும் நடிகை ஸ்ருதிஹாசனின் தாயும் ஆன சரிகா 2000 ரூபாய்க்கு வேலைக்கு போவதாக சொல்வது நம்பும்படி இல்லையே .
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
14 மே, 2022 - 15:25 Report Abuse
sankar மற்றவரக்ளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது அநாகரிகம் . ஒன்றிய அரசு ஒன்னியும் பண்ணலை என்று நூற்றி ஐம்பது கோடி இலவச ஊசி (அதில் கமலுக்கும் பிரீ ) கடந்த ரெண்டு வருடங்களாகக இலவச அரிசி கொடுத்த மோடி . அன்ன மிட்டவானை பொய் கூறி பாலிடால் காலம் பார்த்து கொள்ளும் . எல்லாம் கொடுத்த அரசை ஒன்றிய அரசு ஒன்னியும் பண்ணலை என்று சொல்லும் கமலால் ஊராட்சி அரசு ஊசி போன அரசு என்று சொல்ல தொடை நடுங்கு கிறது . கமல் ஒரு வியாபாரி காசு கொடுத்தால் எதையும் செய்வார் . காலம் பார்த்து கொள்ளட்டும்
Rate this:
Sridharan Venkatraman - Tiruchirappalli,இந்தியா
13 மே, 2022 - 17:42 Report Abuse
Sridharan Venkatraman பத்தல பத்தல என்னும் பல்லவி இவர் தான் கொடுத்திருக்காரு ....
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13 மே, 2022 - 06:34 Report Abuse
Sanny வாணி கணபதிக்கு செய்த துரோகத்தின் கர்மா? அடுத்து பல இலட்சங்கள் கொடுத்துதான் விவாக ரத்து பெற்றார். அதன் பின் அவர் வாழ்த்த வாழ்க்கை என்னாச்சு, இப்போ பலவருடங்கள் பின் புலம்பி கமல் பெயரை அசிங்கப்படுத்துவது ஏன்? இப்பவெல்லாம் வடக்கில் பொலிவூட் படங்கள் சப்பை காட்டுது. பல பாலிவுட் நடிகர்கள் உழைப்புக்காக தமிழ், தெலுங்கு, கன்னட என்று படங்களுக்கு படையெடுத்துவருகிறார்கள், கமலின் Vikram 2படத்தின் சாதனையை முறியடிக்க பாலிவுட் இந்தம்மாவை பயன்படுத்துகிறதா?
Rate this:
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
13 மே, 2022 - 00:43 Report Abuse
Easwar Kamal கமல் கொடுத்த பணத்தை என்ன பண்ணினே ?
Rate this:
ram - mayiladuthurai,இந்தியா
13 மே, 2022 - 10:44Report Abuse
ramசரிதான் அந்த ஆள் கொடுத்திருப்பான் என்று நம்புகிர்களா...
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in