போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
தேனி மாவட்டம், பண்ணைப்புரத்தில் பிறந்தவர் இளையராஜா. ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்தவர். இப்போதும் பல இளம் இசையமைப்பாளர்கள் முன்னணியில் இருந்தாலும் இவருக்கு இருக்கும் இசை வரவேற்பு வேறு யாருக்கும் இருந்தது இல்லை. தற்போதும் பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார். அதோடு பல ஊர்களில் இசை கச்சேரிகளையும் நடத்துகிறார்.
சமீபத்தில் துபாயை தொடர்ந்து சென்னையில் இசை நிகழ்ச்சியை நடத்தியவர் அடுத்து கோவையில் இசை விருந்து படைக்க உள்ளார். வருகிற ஜூன் 2ம் தேதி தனது 80வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார் இளையராஜா. அன்றைய தினம் கோவை, கொடீசியா வளாகத்தில் இசைக்கச்சேரி நடத்துகிறார்.
இதுபற்றி இளையராஜா கூறுகையில், ‛‛எனது பிறந்தநாளில் கோவையில் இசை நிகழ்ச்சி நடத்துவது மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் மிகவும் விரும்பும் பாடல்களை கேட்டு மகிழ வாருங்கள்'' என தெரிவித்துள்ளார்.