தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை | மோகன்லால் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பிரியதர்ஷன் | சிரஞ்சீவிக்கு முதல் திருமண அழைப்பிதழ் வைத்த அல்லு சிரிஷ் | 10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? |

டாக்டர் சந்திரபிரகாஷ் திவேதி இயக்கத்தில், ஷங்கர் இஷான் லாய் இசையமைப்பில், அக்ஷய்குமார், சஞ்சய் தத், சோனு சூட், மனுஷி சில்லர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'பிருத்விராஜ்'. ஹிந்தியில் தயாராகியுள்ள இப்படத்தை தமிழ், தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.
தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த '2.0' படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நாயகன் அக்ஷய்குமாரை தமிழ் ரசிகர்களுக்கும் நன்றாகவே தெரியும். அதனால் இந்தப் படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.
1179ம் ஆண்டில் டில்லிக்கு அரசனாக தனது 13வது வயதில் ஆட்சிக்கு வந்தவர் பிருத்விராஜ் சவுகான். முஸ்லிம் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இராசபுத்திரர்களை ஒன்றிணைத்து அவர்களை எதிர்த்து போரிட்ட மாவீரன் பிருத்விராஜ். முஸ்லிம் மன்னர்களை எதிர்த்துப் போரிட்ட கடைசி இந்து மன்னன் இவரே. ஆப்கானிய மன்னனான கோரி முகம்மதுவை 1191ம் ஆண்டு நடந்த போரில் தோற்கடித்தார். இருப்பினும் அதற்கடுத்த ஆண்டு நடைபெற்ற போரில் பிருத்விராஜ் தோற்றதால் தில்லி, முஸ்லிம் மன்னர்களின் வசமானது. பிருத்விராஜ் மீது காதல் கொண்ட கன்னோசி நாட்டு இளவரசி சம்யுக்தாவின் காதல் வட இந்தியாவில் புகழ் பெற்ற காதல் கதையாகும்.
இப்படத்தில் பிருத்விராஜ் ஆக அக்ஷய்குமார், முக்கிய வேடத்தில் சஞ்சய் தத், கோரி முகம்மது கதாபாத்திரத்தில் மன்னவ் விஜ், சம்யுக்தா கதாபாத்திரத்தில் மனுஷி சில்லர், பிருத்விராஜின் அரசவைப் புலவரும், நண்பருமான சந்த் பார்தாய் கதாபாத்திரத்தில் சோனு சூட் நடித்துள்ளனர்.
காட்சிக்குக் காட்சி பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தும் இப்படத்தின் டிரைலர் தமிழிலும் வெளியாகி உள்ளது. ஜுன் 3ம் தேதி வெளியாகிறது.




