'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ் சினிமாவில் கடந்த 27 வருடங்களாக கதாநாயகனாக நடித்து வருபவர் அருண் விஜய். அவருக்கும் இன்றைய முன்னணி கதாநாயகனாக சிவகார்த்திகேயனுக்கும் இடையே சுமூகமான நட்பு இல்லாமல் இருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் சிவகார்த்திகேயனை விமர்சித்துப் பேசினார் அருண் விஜய் என்ற குற்ச்சாட்டு உண்டு.
இதனிடையே, இன்று அருண் விஜய்யின் மகன் ஆர்னவ் விஜய்க்கு சிவகார்த்திகேயன் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஆர்னவ் சமீபத்தில் வெளிவந்த 'ஓ மை டாக்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இன்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடும் ஆர்னவிற்கு சிகார்த்திகேயன், “இனிய பிறந்தநாள் தம்பி. 'ஓ மை டாக்' படத்தில் உங்களது நடிப்பை ரசித்தேன். உங்களது நடிப்பிற்கும், படிப்பிற்கும் எனது வாழ்த்துகள்,” எனப் பாராட்டியிருந்தார்.
அதற்கு அருண் விஜய், “உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி பிரதர். ஆர்னவ்வை வாழ்த்தியதில் நீங்கள் உண்மையில் அன்பானவர். இதை நிச்சயம் ஆர்னவ்விடம் தெரியப்படுத்துகிறேன்,” என்று நன்றி தெரிவித்துள்ளார்.
இருவருக்குமான பிரச்சினை தீர்ந்து சுமூகமான நட்பில் வந்ததற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.