அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
தெலுங்கு நடிகர் ராம்சரணின் 15வது படத்தை ஷங்கர் இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இந்த படத்தில் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஒரு வேடத்திற்கு கியாரா அத்வானி ஜோடியாக நடிக்கிறார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இரண்டாவது வேடத்திற்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முதல் படம் இது. அதேபோல ராம்சரணுக்கு ஜோடியாக நடிப்பதும் இதுவே முதல் முறை. கீர்த்தி சுரேஷ் போலோ சங்கர் படத்தில் ராம்சரணின் தந்தை சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தில்ராஜ் தயாரிக்கிறார், தமன் இசை அமைக்கிறார். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். படக் கதையில் பிளாஷ்பேக்கில் வரும் சிறிய பீரியட் காட்சிகளில் ராம்சரணுடன் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்படுகிறது.