ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
2022ம் ஆண்டின் ஆரம்பமே கொரானோவின் மூன்றாவது அலையால் தள்ளாடியது. பல மாநிலங்களில் தியேட்டர்களில் 50 சதவீத அனுமதி மட்டுமே வழங்கப்பட்டது. அதனால், பல பெரிய படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டது. அப்படி தள்ளி வைக்கப்பட்ட படங்களில் 'ஆர்ஆர்ஆர்' படமும் ஒன்று. ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய படம் மார்ச் மாதம் 25ம் தேதி வெளியானது. இருப்பினும் எதிர்பார்த்ததைப் போலவே படத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. 1000 கோடி வசூலை இந்தப் படம் கடந்து, இந்த ஆண்டின் அதிக வசூலைப் பெற்ற படம் என்ற பெருமையைப் பெற்றது. ஆனாலும், அந்த சாதனை சில நாட்கள் மட்டுமே நீடித்தது.
ஏப்ரல் 14ம் தேதி வெளிவந்த 'கேஜிஎப் 2' படம் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இந்திய வசூல் சாதனையை முறியடித்து 2022ம் ஆண்டில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையை தட்டிப் பறித்தது. 'ஆர்ஆர்ஆர்' படம் 44 நாட்களில் பெற்ற வசூலை 24 நாட்களிலேயே பெற்றது. இந்திய அளவில் 'ஆர்ஆர்ஆர்' படம் 905 கோடி வசூலைப் பெற்றது. 'கேஜிஎப் 2' படம் 930 கோடியைக் கடந்துள்ளது.
வெளிநாடுகளில் மட்டும் 'ஆர்ஆர்ஆர்' படம் 200 கோடிக்கும் அதிகமான வசூலிக் குவித்துள்ளது. அதே சமயம் 'கேஜிஎப் 2' படம் வெளிநாடுகளில் 180 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. அந்த சாதனையை முறியடிக்க இன்னும் 20 கோடி வசூலித்தாக வேண்டும். அதையும் சில நாட்களில் முறியடிக்க வாய்ப்புள்ளது.
2022ம் ஆண்டில் 'கேஜிஎப் 2' சாதனையை அடுத்து வரும் வேறு எந்த படமாவது முறியடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.