ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. நடிகர் நாகசைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே பிரிந்தார். பொதுவாக ஒரு நடிகைக்குத் திருமணம் ஆகிவிட்டால் அதையே காரணமாக வைத்து அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள். ஆனால், அந்தத் தடைகளை மீறி திருமணத்திற்குப் பின்னும் கதாநாயகியாக நடித்து வந்தார் சமந்தா. திருமணப் பிரிவுக்குப் பிறகும் அவரது இமேஜ் போய்விடும், வாய்ப்புகள் கிடைக்காது என்றார்கள். இருந்தாலும் இப்போதுதான் இன்னும் அதிகமான வாய்ப்புகளைப் பெற்று வருகிறார் சமந்தா.
தற்போது 'சாகுந்தலம், யசோதா' என அடுத்தடுத்து இரண்டு பான் இந்தியா படங்கள் சமந்தா நடித்து வரவிருக்கின்றன. விஜய் தேவரகொன்டா ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படமும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த இரு தினங்களாக ஒரு பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட கவர்ச்சிப் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து ஆச்சரியப்படுத்தி வருகிறார் சமந்தா. அந்தப் பத்திரிகையின் பேட்டியிலும் கவர்ச்சியாகவும், ஆக்ஷன் கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தயார் என சொல்லியிருக்கிறார்.
“எனது நிறத்துக்காக எனக்கு நம்பிக்கை வருவதற்கு சில காலங்கள் ஆனது. ஆனால், இப்போது கவர்ச்சியான கதாபாத்திரம் என்றாலும், ஆக்ஷன் கதாபாத்திரம் என்றாலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க நிறைய நம்பிக்கை வந்துள்ளது. எனது கடந்த காலங்களில் அப்படி நடிக்க எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. நிறைய படங்களில் நடித்த பிறகு எனக்கு நம்பிக்கை அதிகமானது என்று சொல்லலாம். வயதும் அனுபவமும் அதற்கு ஒரு காரணம்,” எனத் தெரிவித்துள்ளார்.




