டிசம்பர் 23ல் வருகிறான் 'ருத்ரன்' | சமந்தா பாணியில் கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி! | ‛யானை' படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரம்பா | லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவனை நயன்தாரா கட்டி அணைத்த புகைப்படம் | இரண்டாவது திருமணம் - ரசிகருக்கு அமலா பால் கொடுத்த பதில்! | ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிய மாதவன்- சூர்யா | கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே' | அரசியல் யோசனை இல்லை: நடிகர் அருள்நிதி ‛பளிச்' | மகன் விஜய் வராமல் பிறந்தநாள் கொண்டாடிய எஸ்ஏ சந்திரசேகர் | மூன்று வருடங்களுக்குப் பிறகு சாய் பல்லவியின் தமிழ் ரிலீஸ் |
இயக்குனர் என்பதைவிட ஒரு நடிகராக சமுத்திரக்கனிக்கு சினிமாவில் நல்ல வரவேற்பும் மார்க்கெட்டும் இருக்கிறது. அதனால் ஒரு பக்கம் கதையின் நாயகனாக நடித்துக் கொண்டு இன்னொரு பக்கம் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தர இயக்குனர்கள் தயாராக இருக்கின்றனர்.
கடந்த மாதங்களில் வெளியான பீம்லா நாயக், ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களில் கூட முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி நடித்திருந்தார். அந்தவகையில் வரும் மே 13ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் சமுத்திரக்கனி நடித்துள்ள முக்கியமான இரண்டு படங்கள் வெளியாக இருக்கின்றன.
இதில் தமிழில் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகன் நடித்துள்ள டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி. ரஜினிமுருகன், நம்மவீட்டுப்பிள்ளை படங்களை தொடர்ந்து இவர்கள் இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் இது. அதேபோல தெலுங்கில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்காரு வாரி பாட்டா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி. பரசுராம் இயக்கியுள்ள இந்தப் படமும் வரும் மே 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது