விஜயகாந்த் நடித்த கள்ளழகர் என்ற படத்தில் அறிமுகமானவர் லைலா. அதன்பிறகு பிதாமகன், கம்பீரம், உள்பட பல படங்களில் நடித்தார். 2006ம் ஆண்டு ஈரான் நாட்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு வெளியேறிவிட்டார். தற்போது லைலாவுக்கு 12, 9 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கார்த்தி நடித்து வரும் சர்தார் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் லைலா.
அதேபோல் ஓடிடி.,யில் வெளியாக உள்ள வதந்தி என்ற தொடரின் எஸ்.ஜே. சூர்யா உடன் இணைந்து நடிக்கிறார். சமீபகாலமாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருவரும் லைலா தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, விஜய்சேதுபதியை சந்தித்ததில் தனக்கு பெரிய மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார். அதோடு தனது கணவர் மற்றும் மகன்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் லைலா. இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.