திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
தற்போது விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது வினோத் இயக்கத்தில் தனது 61வது படத்தில் நடிக்கும் அஜித், அடுத்தபடியாக விக்னேஷ் சிவன் இயக்கும் 62வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித்தின் 62வது படம் குறித்து விக்னேஷ் சிவன் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், அஜித் நடித்த வாலி மற்றும் மங்காத்தா படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். மங்காத்தா படத்தின் இடைவேளை காட்சி அவர் மட்டுமே அந்த சீனில் நடித்திருப்பார். மிக அற்புதமான பெர்பாமன்ஸ் கொடுத்திருப்பார். அதனால் அது போன்ற வித்தியாசமான கதையில் அஜித்தை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்த போகிறேன். அந்தவகையில் அஜித் 62வது படத்தை மங்காத்தா பட பாணியில் எடுக்க முயற்சி செய்யப் போவதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் விக்னேஷ்சிவன்.