ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக லோகேஷ் கனகராஜ் வலம் வருகிறார். கார்த்தி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தை இயக்கி முக்கிய இயக்குனராக வலம் வருகிறார். தற்போது ரஜினியை வைத்து 'கூலி' எனும் படத்தை இயக்கி உள்ளார். ரஜினி உடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்பு வேடத்தில் அமீர்கான் நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அவரது சமூக வலைதள பக்கத்தில், "கூலி படத்தின் புரோமோஷன் வரை தற்காலிகமாக சமூக வலைதளங்களில் இருந்து நான் சிறிய இடைவெளி எடுக்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.
கூலி படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. இதற்காக இந்த இடைவெளியை அவர் எடுத்துள்ளார். ஏற்கனவே லியோ படத்தின்போதும் இதேபோல் லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




