ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை 2002ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளார்கள். மேலும், ஆந்திராவிலுள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இடம் பெற்றுள்ள ரோஜா, அம்மாநிலத்தின் கடந்த ஆட்சி காலத்தில் அமைச்சராகவும் இருந்தார்.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோஜா தனது கணவர் செல்வமணி குறித்து பேசியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், ''நான் வீட்டில் எப்போதுமே சண்டை போட்டுக் கொண்டே இருப்பேன். ஆனால் எனது கணவர் செல்வமணி சண்டை போட மாட்டார். அதையும் மீறி அவருக்கு கோபம் வந்தால் அந்த கோபத்தை என்னிடத்தில் காட்டாமல், தனது அறை கதவை மூடிக் கொள்வார். இதற்கு காரணம் அவர் பதிலுக்கு என்னைத் திட்டினால் நான் அழுவேன். அதன் பிறகு என்னை சமாதானப்படுத்த அவர் ரொம்ப கஷ்டப்பட வேண்டியதிருக்கும்'' என்று பேசிய ரோஜா, ''ஆண்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் மனைவியிடம் தோற்று போங்கள். மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டே இருந்தால் வெளியில் போய் வெற்றி பெற முடியாது'' என்றும் பேசி உள்ளார்.




