ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்துள்ள படம் 'ரெட்ரோ'. மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் இந்த படம் காதல், கேங்ஸ்டர் இரண்டும் கலந்த கதையில் உருவாகியுள்ளது. இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இரண்டு பாடல்களை வெளியிட்டுள்ளார்கள். அதில் 'கனிமா' என்ற பாடல் மெகா ஹிட் அடித்துள்ளது.
இந்த பாடல் குறித்து இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறுகையில், ''இந்த ரெட்ரோ படம் 1990 கால கட்ட கதையில் உருவாகி இருப்பதால் அப்போதைய இசையை இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளேன். குறிப்பாக, அந்த காலகட்டத்தில் டி. ராஜேந்திரன் 'மைதிலி என்னை காதலி' படத்தில் இடம்பெற்ற 'என் ஆசை மைதிலியே' என்ற பாடலை தழுவிதான் 'கனிமா' பாடலை உருவாக்கினேன். அந்த வகையில், என் ஆசை மைதிலியே பாடல் அந்த காலகட்டத்தில் எப்படி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காக இருந்ததோ அதுபோன்று இப்போது இந்த கனிமா பாடலும் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங்காகி வருகிறது'' என்கிறார் சந்தோஷ் நாராயணன்.