டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டான்டன் மற்றும் பலர் நடித்து ஏப்ரல் 14ம் தேதி வெளியான படம் 'கேஜிஎப் 2'. கன்னடத்தில் தயாரான இந்தப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியானது. முதல் நாளிலிருந்தே தொடர்ந்து வசூலைக் குவித்து வந்த இந்தப் படம் 15 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.
இதற்கு முன்பு இந்தியத் திரையுலகத்தில் 'டங்கல், பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் மட்டுமே 1000 கோடி வசூலைக் குவித்தன. அந்த வரிசையில் நான்காவது படமாக இப்போது 'கேஜிஎப் 2' படமும் இணைந்துள்ளது.
1000 கோடி வசூலைப் பெற்ற விதம்…
கர்நாடகா - 152 கோடி
ஆந்திரா, தெலங்கானா - 125 கோடி
தமிழ்நாடு - 86 கோடி
கேரளா - 54 கோடி
ஹிந்தி, பிற மாநிலங்கள் - 420 கோடி
வெளிநாடு - 163 கோடி
ஆக மொத்தம் 1000 கோடி. கன்னட சினிமாவிலிருந்து ஒரு படம் இந்த அளவிற்கு வசூலித்திருப்பது மிகப் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இப்படம் வெறும் 100 கோடி ரூபாய் செலவில் மட்டுமே தயாரிக்கப்பட்டு 1000 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.




