'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
அவனே ஸ்ரீமன்நாரயணா படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ரக்ஷித் ஷெட்டியின் அடுத்த படம் '777 சார்லி'. சங்கீதா சிருங்கேரி, ராஜ் பி ஷெட்டி, தானிஷ் சேட், பாபி சிம்ஹா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு நோபின் பால் இசை அமைத்துள்ளார். அர்விந்த் எஸ். காஷ்யப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பரம்வாஹ் ஸ்டூடியோஸ் சார்பில் ஜி.எஸ் குப்தா மற்றும் ரக்ஷித் ஷெட்டி இணைந்து தயாரித்துள்ளனர். கிரண்ராஜ் இயக்கி உள்ளார். இந்த படம் வருகிற ஜூன் 10ம் தேதி வெளிவருகிறது. தமிழில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பென்ச் பிலிம்ஸ் வெளியிடவுள்ளது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் தயாராகி உள்ள பான் இந்தியா படம் இது. சார்லி எனும் நாய்க்குட்டி மற்றும் அதன் 'நண்பனான' தர்மாவை சுற்றி சுழலும் கதை. ஏற்கெனவே நாயை மையாக கொண்டு ஓ மை டாக் என்ற படம் வெளியாகி இருக்கும் நிலையில் அடுத்ததாக இந்த படம் வெளிவருகிறது.