கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு |
எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.தமிழ்செல்வம் தயாரித்துள்ள படம் மெய்ப்பட. இதில் ஆதவ் பாலாஜி, மதுநிக்கா, ஜெயபாலன், ராஜ்கபூர், ஓ.ஏ.கே.சுந்தர் உள்பட பலர் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் தமிழ் செல்வம் வில்லனாக நடிக்கிறார். வேலன் இயக்கி உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பரணி இசை அமைத்துள்ளார், ஆர்.வேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இன்றைய நவீன தகவல் தொழில்நுட்பம், குறிப்பாக செல்போனால் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை அதிகரித்துள்ளது. இது நகர்புறத்தில் மட்டுமல்ல கிராமபுரத்திலும் பரவி உள்ளது. அதனை படம்பிடித்து காட்டும் படமாக இது ஒருவாகி இருக்கிறது. ஒரு சிறிய தவறு எப்படி பெரும் பகையாக மாறுகிறது என்பதையும் படம் சொல்கிறது. என்கிறார், இயக்குனர் வேலன்.