சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
அஜித், சிம்ரன், ஜோதிகா நடிப்பில் 1999ம் ஆண்டு எஸ்.ஜே .சூர்யா இயக்கிய படம் வாலி. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கியிருந்தார். ஆனால் வாலி ஹிந்தி பதிப்பையும் தானே இயக்க எஸ்.ஜே .சூர்யா திட்டமிட்டிருந்த நிலையில், இந்த படத்தின் கதை திரைக்கதை தனக்கே சொந்தம் . அதனால் வாலி படத்தை போனிகபூர் ஹிந்தியில் ரீமேக் செய்ய அனுமதிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ் .ஜே. சூர்யா மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனபோதிலும் இப்படத்தின் கதை எழுதியவருக்கே சொந்தம் என்பதற்கான ஆவணங்களை அவர் வழங்கவில்லை. படத்தின் காப்புரிமை என்பது தயாரிப்பாளருக்கு சொந்தமானது என்பதால் ஹிந்தி ரீமேக் வேலையை தொடங்குவதற்கு போனி கபூருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, சென்னை உயர் நீதிமன்ற விசாரணையில் தற்போது உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி எஸ்.ஜே. சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.