டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பிரேமம் படத்தில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் கொடி. தள்ளிப்போகாதே போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் பிசியாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சூர்யா பேட்டை என்ற பகுதியில் ஒரு வணிக வளாகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். இவர் வருவதை அறிந்து அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து உள்ளார்கள். அப்போது அங்கு சென்ற அனுபமா ரசிகர்களைப் பார்த்து கையசைத்து படி சென்றுள்ளார். ஆனால் நிகழ்ச்சி முடிந்ததும் தனது காரில் ஏற வந்த அவருடன் செல்பி எடுப்பதற்கு ரசிகர்கள் சூழ்ந்து உள்ளார்கள். ஆனால் அனுபவம் போலீஸ் பந்தோபஸ்துடன் தனது காரில் ஏறி அங்கிருந்து புறப்பட முற்பட்டுள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த ரசிகர்கள் அவரது காரை செல்லவிடாமல் ரகளை செய்ததோடு, கார் டயரில் காற்றை பிடுங்கி விட்டு உள்ளார்கள். இதனால் வேறொரு காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு உள்ளார் அனுபமா. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




