நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்த தனுஷ்: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | மலையாள சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு : சுஹாசினி திடீர் குற்றச்சாட்டு | நானும் கட்சி தொடங்குவேன் : பார்த்திபன் சொல்கிறார் | பிரபஞ்சத்துக்கே நான்தான் சூப்பர் ஸ்டார்: மிர்ச்சி சிவா கலகல | பிளாஷ்பேக்: ஜெயனுக்கு பதில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: காணாமல் போன வெற்றிப்பட நாயகன், நாயகி | 'விடுதலை 2' டிரைலர் வசனம்: விஜய்யை குறி வைக்கிறதா? | சூர்யா 45 படப்பிடிப்பு பொள்ளாச்சியில் இன்று ஆரம்பம் | 30 மில்லியனைக் கடந்த கீர்த்தி சுரேஷின் கிளாமர் நடனம் | 9 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்? கமென்ட் 'ஆப்' செய்த அகில் |
உலக புகழ் பெற்ற ஈரானிய திரைப்படம் சில்ட்ரன் ஆப் ஹெவன். இதனை ஈரானிய இயக்குனர் மதிஜ் மஜிதி இயக்கி இருந்தார். இந்த படத்தின் ரீமேக் உரிமத்தை முறைப்படி பெற்று அக்கா கருவி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள். மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரித்துள்ளது. உயிர், மிருகம் படங்களை இயக்கிய சாமி இயக்கி உள்ளார். இப்படத்தை, பி வி ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் மே 6 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
இந்த படத்தை பார்த்த ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி, இயக்குனர் சாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: என்னுடைய 'சில்ட்ரன் ஆப் ஹெவன்' படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகியுள்ள 'அக்கா குருவி' படத்தை பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி. ஒரிஜினலில் உள்ள உணர்வுகளை, கதையை இப்படத்தில் கையாண்ட விதம் அற்புதமாக இருந்தது. மிக உண்மையான மறு உருவாக்கமாக படம் அமைந்துள்ளது.
கிளைக்கதையாக வரும் காதல் கதை, உங்கள் கலாச்சாரத்தோடு ஒத்துபோக கூடியதென்று நம்புகிறேன். இப்படத்தின் இசையை மிக மிக ரசித்தேன். கதையின் சாரத்தை வெளிப்படுத்தும் அற்புத இசை. முடிந்தால் உங்கள் அனைவரையும் சந்திக்கவும், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன். இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். நன்றி என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.