காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? | கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? |

மகேஷ்பாபு நடிப்பில் பரசுராம் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் வரும் மே மாதம் வெளியாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் தனது பணிகளை முடித்துக் கொடுத்துவிட்ட மகேஷ்பாபு தனது குடும்பத்துடன் ஜாலியாக துபாய்க்கு டூர் கிளம்பியுள்ளார். சமீபத்தில் அவர் தனது குடும்பத்துடன் துபாய் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகின.
இந்த நிலையில் இன்னும் சில தினங்களில் இயக்குனர் ராஜமவுலியும் தனது குடும்பத்துடன் துபாய்க்கு டூர் கிளம்ப இருக்கிறார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. மகேஷ்பாபுவின் அடுத்த படத்தை இயக்குனர் ராஜமவுலி தான் இயக்குகிறார் என்பது ஏற்கனவே அதிகாரபூர்வமாக வெளியான தகவல். இந்தநிலையில் இந்த புதிய படத்தின் கதை குறித்து துபாயில் மகேஷ்பாபுவுடன் விவாதிப்பதற்காக ராஜமவுலியும் துபாய் கிளம்பி செல்கிறார் என்று அவரது பயணத்திற்கான காரணமாக சொல்லப்படுகிறது.