75வது நாளில் 'விக்ரம்' | பார்ட் 1, 2 என ஒப்புதல் வாக்குமூலம் அளித்த ஜேக்குலின்! கொதித்தெளிந்த ரசிகர்கள்! | நிவின்பாலி படம் மூலம் மலையாளத்தில் நுழையும் அனிருத் | இப்பவும் ரொம்ப லவ் பண்றேன், ஆனால்? விவாகரத்துக்கு வைஷ்ணவியின் பளீச் பதில்! | முடிவுக்கு வந்த 7 வருட கதை; வருத்தத்தில் ரசிகர்கள்! | விஜய்-67 ; தீவிர கதை விவாதத்தில் லோகேஷ் கனகராஜ் | டாலடிக்கும் ரத்தினமே - நயனை வர்ணிக்கும் விக்கி | ‛‛தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த்'' - திரைப்பிரபலங்களின் சுதந்திர தின கொண்டாட்டம் | இணையத்தில் கசிந்த விஜய்யின் வாரிசு படக் காட்சி | இந்தியன் 2க்கு தயாரான காஜல் அகர்வால் |
அட்லீ இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து 2016ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‛தெறி'. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பிரபாஸ் நடித்த ‛சாஹோ' படத்தை இயக்கிய சுஜித் இந்தப் படத்தை இயக்கப் போகிறாராம்.
‛தெறி' ரீமேக் பற்றி கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வெளியாகி வந்தன. இப்போதுதான் பவன் கல்யாண் நடிக்க சம்மதம் தெரிவித்துள்தாகச் சொல்கிறார்கள். பவன் கல்யாண் தற்போது ‛ஹரஹர வீர மல்லு, பாவதீயுடு பகத் சிங்' மற்றும் ‛வினோதய சித்தம்' தெலுங்கு ரீமேக் ஆகியவற்றை தன் வசம் வைத்துள்ளார். இப்போது ‛தெறி' ரீமேக்கும் அவரது படங்களின் வரிசையில் இணைகிறது.