ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
அட்லீ இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து 2016ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‛தெறி'. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பிரபாஸ் நடித்த ‛சாஹோ' படத்தை இயக்கிய சுஜித் இந்தப் படத்தை இயக்கப் போகிறாராம்.
‛தெறி' ரீமேக் பற்றி கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வெளியாகி வந்தன. இப்போதுதான் பவன் கல்யாண் நடிக்க சம்மதம் தெரிவித்துள்தாகச் சொல்கிறார்கள். பவன் கல்யாண் தற்போது ‛ஹரஹர வீர மல்லு, பாவதீயுடு பகத் சிங்' மற்றும் ‛வினோதய சித்தம்' தெலுங்கு ரீமேக் ஆகியவற்றை தன் வசம் வைத்துள்ளார். இப்போது ‛தெறி' ரீமேக்கும் அவரது படங்களின் வரிசையில் இணைகிறது.