சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
ராஜமவுலியின் இயக்கத்தில் நடித்த ஆர்ஆர்ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இன்னொரு பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் தனது 15வது படத்தில் நடிக்கும் வேலைகளை கவனிக்க ஆரம்பித்து விட்டார் நடிகர் ராம்சரண். ஏற்கனவே ஐதராபாத்தில் ஒரு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது பஞ்சாபில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. பான் இந்தியா படமாக வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் ராம்சரணுக்கு இந்திய அளவில் மிகப்பெரிய அறிமுகம் கிடைத்துள்ளதை பஞ்சாப்பில் நடைபெற்ற படப்பிடிப்பில் பார்க்க முடிந்தது..
இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட பஞ்சாப் போலீசார், ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படங்களும் செல்பியும் எடுத்துக் கொண்டனர். அதுமட்டுமல்ல அந்த படப்பிடிப்பு பகுதியில் கூடிய பொதுமக்கள் குறிப்பாக இளம்பெண்கள் ராம்சரணுடன் புகைப்படம் எடுக்க முண்டியடிக்க, அதிலும் ராம்சரண் அவர்கள் ஒவ்வொருவரின் மொபைல் போனையும் வாங்கி அவர்களுடன் தானே செல்பி எடுத்து கொடுத்த வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.