'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் நாயகி பூஜா ஹெக்டேவை தவிர கவனிக்கத்தக்க இன்னொரு கதாநாயகியாக நடித்திருந்தவர் மலையாள நடிகை அபர்ணா தாஸ். இந்த படம் வெளியாவதற்கு முன்பே அபர்ணா தாஸ் ஆர்மி என ஆரம்பிக்கும் அளவிற்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தார். விஜய்யுடன் இணைந்து நடித்த பிறகு மலையாள திரையுலகில் கூடுதல் அந்தஸ்தை பெற்றுள்ளார் அபர்ணா தாஸ்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மனோகரம் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அபர்ணா தாஸ், அதைத் தொடர்ந்து 'பிரியன் ஓட்டத்திலானு' என்கிற படத்தில் நடித்து வந்தார். அந்த சமயத்தில்தான் பீஸ்டு பட வாய்ப்பு வந்து தமிழிலும் அடி எடுத்து வைத்தார். விஜய் படத்தில் நடித்ததை தொடர்ந்து அபர்ணாவின் இந்த மலையாளப் படம் ரிலீசுக்காக தூசி தட்டப்பட்டு வேலைகள் துவங்கப்பட்டுள்ளன. அதன் முதற்கட்டமாக சித்திரை விஷுவை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அநேகமாக அடுத்த மாதம் இந்தப்படம் திரைக்கு வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.