நான் குடிக்கவேமாட்டேன் : ஓட்டேரி சிவா கண்ணீர் பேட்டி | சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள் | தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி | 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? | கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா திருமணம், பிரபலங்கள் வாழ்த்து | விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் |
தற்போது தான் நடித்து வரும் ஆடுஜீவிதம் படத்திற்காக சகாரா பாலைவனத்தில் ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருக்கிறார் நடிகர் பிரித்விராஜ், இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்பு கேரளா திரும்பியதும் தீர்ப்பு என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார். கடந்த வருடமே படத்திற்கான அறிவிப்பும் வெளியானது. இந்தப்படத்தில் கதாநாயகியாக இஷா தல்வார் நடிக்கிறார். ரணம் படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் இந்தப்படத்தில் ஜோடி சேர்கின்றனர். திலீப்-சித்தார்த் இணைந்து நடித்த கம்மார சம்பவம் படத்தை இயக்கிய ரதீஷ் அம்பாட் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இந்தப்படத்தில் பரிசோதனை முயற்சியாக அலெகோரி என்கிற புதிய பாணியில் கதையை எழுதியுள்ளார் கதாசிரியரும் நடிகருமான முரளி கோபி. அதாவது, படத்தில் மேம்போக்காக ஒரு கதை சொல்லப்பட்டாலும் அதில் இன்னொரு கதையும் மறைமுகமாக சொல்லப்பட்டு கொண்டே வரும். இந்த இரண்டுக்குமே சம்பந்தம் இல்லாதது போல் தெரிந்தாலும் மறைமுகமாக சொல்லப்படும் கதையை மேம்போக்காக சொல்லப்படும் கதை, படம் முழுவதும் பிரதிபலிக்கும் என்கிறார் முரளி கோபி. ஹாலிவுட் படங்களில் இதுபோன்று ஜானரில் சில படங்கள் வெளியாகியுள்ளன மலையாளத்தில் இதுதான் முதல் முறை என்று கூறியுள்ளார்.
பிரித்விராஜ், முதன்முறையாக இயக்குனராக மாறி, மோகன்லாலை வைத்து இயக்கிய 'லூசிபர்' என்கிற சூப்பர் ஹிட் படத்தின் கதையை எழுதியவர் தான் இந்த முரளி கோபி. அதுமட்டுமல்ல கம்மார சம்பவம் படத்திற்கும் கதை எழுதியதும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.