அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
மலையாள முன்னணி நடிகரான திலீப் மீது பிரபல நடிகையை காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு மற்றும் விசாரணை அதிகாரியை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கு என இரண்டு பெரிய கிரிமினல் வழக்கு நடந்து வருகிறது. திலீப்புக்கு எதிரான வலுவான ஆதாரங்களை போலீசார் திரட்டி உள்ளனர். விரைவில் நடிகை கடத்தல் வழக்கு முடிவடைய இருக்கிறது. இதில் திலீப்புக்கு எப்படியும் தண்டனை கிடைக்கும் என்று சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் திலீப் திடீரென்று நேற்று சபரிமலைக்கு சென்று வழிபாடு நடத்தினார். முதல்நாள் இரவே சபரிமலைக்கு வந்து தங்கியிருந்த அவர் நேற்று அதிகாலை சன்னிதானத்தில் வழிபாடு நடத்தினார். அப்போது அவர் விரதம் இருந்தவர்கள் அணியும் ஆடையும், மாலையும் அணிந்திருந்தார். அவரது பெயரில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. அவருடன் அவரது உதவியாளரும், மானேஜரும் மட்டுமே உடன் வந்திருந்தனர்.
இரண்டு குற்ற வழக்கிலிருந்தும் தனக்கு விடுதலை கிடைக்க வேண்டும். தனது கலை பயணமும், வாழ்க்கை பயணமும் எந்தவித இடையூறுமின்றி நடக்க வேண்டும் என்று அவர் வேண்டுதல் செய்ததாக கூறப்படுகிறது.