'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தெலுங்கு ஹீரோக்கள் தற்போது பான் இந்தியா ஹீரோக்களாக மாறி வருகிறார்கள். ஏற்கெனவே பிரபாஸ், அல்லு அர்ஜூன் மாறி இருக்கும் நிலையில் அடுத்து வருகிறார் நிகில் சித்தார்த். நிகில் நடிப்பில் ஸ்பை என்ற படம் பான் இந்தியா படமாக பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. இதனை தெலுங்கு சினிமாவின் முன்னணி எடிட்டரான கேரி இயக்குகிறார். சரண் தேஜ் உப்பலாபதி மற்றும் கே.ராஜசேகர் ரெட்டி இணைந்து தயாரிக்கின்றனர். ஐஷ்வர்யா மேனன் இந்தப் படத்தில் நிகிலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
அபினவ் கோமாடம், சன்யா தாகூர், ஜிஸ்சு சென் குப்தா , நிதின் மேத்தா மற்றும் ரவி வர்மா உள்பட பலர் நடிக்கிறார்கள். ஹாலிவுட் படங்களின் ஒளிப்பதிவாளர் ஜூலியன் அமரு எஸ்டார்டா ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீ சரண் பகாலா இசையமைக்கிறார்..
படத்தின் டைட்டில் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர். படம் தசரா பண்டிகை அன்று, தெலுங்கு ஹிந்தி தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.