பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! |
உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் 'கேஜிஎப் 2'. இப்படத்தின் மூலம் இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் என பெயரைப் பெற்றிருக்கிறார் பிரசாந்த் நீல்.
'கேஜிஎப் 2' படம் குறித்த பல பேட்டிகளை அவர் கொடுத்துள்ளார். அதில் ஒரு பேட்டியில் அவர் பேசியிருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படி கதை எழுதுகிறீர்கள் என்ற ஒரு கேள்விக்கு, “குடித்த பின்தான் கதைகளை எழுதுவேன். மறுநாள் நான் நிதானமாக இருக்கும் போது முன்தினம் போதையில் எழுதிய கதையைப் படித்துப் பார்த்தேன். அப்போது அவை எனக்கு சிறந்ததாகத் தெரிந்தால் உடனே அதற்குரிய திரைக்கதையை எழுதுவேன்,” என வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
பொதுவாகவே திரையுலகத்தில் உள்ளவர்கள் குடிப்பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்ற பேச்சு உண்டு. இந்தக் காலத்தில் அனைவருமே அவர்களது பழக்க வழக்கங்களை வெளிப்படையாகப் பேசிவிடுகிறார்கள். பிரசாந்த் நீல் இப்படி வெளிப்படையாகப் பேசியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியாகவே உள்ளது. இதனால், வளரத் துடிக்கும் பலரும் குடித்தால் நன்றாக கதை எழுதலாம் என அந்த முயற்சியில் இறங்கும் ஆபத்தும் இருக்கிறது.