இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்து ஏப்ரல் 14ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள படம் 'கேஜிஎப் 2'. எதிர்பார்ப்புகளுக்கும் மீறி இப்படம் அதிக வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது.
ஹிந்தியில் இரண்டே நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்து, இந்திய அளவில் 240 கோடி வசூலைக் கடந்தது. நேற்றுடன் இப்படம் உலக அளவில் 400 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஏற்கெனவே முன்பதிவுகள் நடந்து முடிந்துவிட்டது. இன்று ஒரு நாளில் இப்படம் மீண்டும் 100 கோடி வசூலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், முதல் வார இறுதி வசூலாக இப்படம் 500 கோடி வசூலைக் கடந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னிந்திய மாநிலங்களில் அதிக பட்சமாக கர்நாடகாவில் 70 கோடி வசூலை இப்படம் கடந்துள்ளது. தெலுங்கு மாநிலங்களில் 65 கோடி, தமிழகத்தில் 25 கோடி, கேரளாவில் 20 கோடி வசூலித்துள்ளது என்கிறார்கள்.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் முதல் வார இறுதி வசூலை 'கேஜிஎப் 2' படம் நிச்சயம் முறிடித்துவிடும் என்பதுதான் பாக்ஸ் ஆபீஸ் தகவலாக உள்ளது.