புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து இரண்டு படங்கள் அடுத்தடுத்த நாட்களில் பான்--இந்தியா படங்களாக வெளியாகி வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது. விஜய் நடித்த தமிழ்ப் படமான 'பீஸ்ட்', யஷ் நடித்த கன்னடப் படமான 'கேஜிஎப் 2' இரண்டு படங்களுமே இந்த வார வெளியீடுகளாக அமைந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே, கன்னட மீடியாக்களில் 'கேஜிஎப் 2' படத்தின் பிரத்யேகக் காட்சியை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. அது மட்டுமல்ல படத்தைப் பார்த்து வியந்து போன ரஜினிகாந்த், இயக்குனரை நேரில் பார்த்து பாராட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
அதே போல 'பீஸ்ட்' படத்தையும் ரஜினிகாந்த் பார்த்ததாகவும் ஆனால், படத்தைப் பார்த்து எந்த கமெண்ட்டும் சொல்லாமல் போய்விட்டதாகவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. 'பீஸ்ட்' படத்தை இயக்கிய நெல்சன் தான் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில கன்னட ஊடகங்கள் அதற்குள் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகிறாரா என செய்திகளை வெளியிட ஆரம்பித்துவிட்டன. பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். அதற்கடுத்து ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார்.