அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
பகத் பாசில் நடித்து மலையாளத்தில் வெளியான படம் டிரான்ஸ். போலி மத போதகர்களின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட படம். நஸ்ரியா, கவுதம் வாசுதேவ் மேனன், திலீஷ் போத்தன், செம்பியான் வினோத், விநாயகன் உட்பட பலர் நடித்திருந்தார்கள், அன்வர் ரஷீத் தயாரித்து இயக்கி இருந்தார். இந்த படம் தமிழில் நிலை மறந்தவன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளி வர உள்ளது.
மக்களை திசை திருப்பி, உடல் குணமாகும், காது கேட்கும், நடக்க முடியும் என்று பொய் மத பிரச்சாரம் செய்யும் கும்பலை தோலுரித்து இந்த படம் காட்டுகிறது. இந்த படத்தை அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பார்த்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.வின் ஹெச்.ராஜா : ‛‛மத மாற்றம் செய்யும் அனைவருக்கும் இந்த படம் நல்ல பாடம். இந்த படம் நடப்பதை அப்படியே சொல்லி உள்ளது. எதையும் மிகைப்படுத்தவில்லை. நடப்பதை சம்பவமாக, சரித்திரமாக சொல்லி உள்ளனர். இது டப்பிங் படம் போன்று தெரியவில்லை. தமிழகத்தில் ரவுடிசம் பெருகிவிட்டது. பீஸ்ட் படம் மக்களை போய் சேரவில்லை. நீங்கள் என்னிடம் கேள்வி கேட்டு அந்த படத்தை ஓட வைக்க முயற்சி செய்யாதீர்கள்'' என்றார்.
அர்ஜுன் சம்பத் பேசும்போது, ‛‛திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் திரை துறையை அவர்களே கையில் எடுத்துக் கொள்கின்றனர். கொஞ்சம் மற்றவர்களையும் சம்பாதிக்க விடுங்க'' என்றார்