ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வருகிற 25ம் தேதி கமல் நடித்து இயக்கி உள்ள விஸ்வரூபம் வெளிவருகிறது. இதில் ஆண்ட்ரியா, பூஜா குமார் என்ற இரண்டு ஹீரோயின்கள். இதில் ஆண்ட்ரியா பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் பூஜாகுமார் புதுமுகம் என்றே எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் ரொம்ப பழைய முகம்தான். 13 வருடங்களுக்கு முன்பு கேயார் இயக்கிய காதல் ரோஜாவே படத்தில் அறிமுகமானவர் பூஜா குமார். அதன்பிறகு மேஜிக் மேஜிக் என்ற மலையாள 3டி படத்தில் நடித்தார். பின்பு வாய்ப்பில்லாமல் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட பூஜாகுமார் அங்கு9 ஆங்கிலப் படங்களில் நடித்தார். அதை பார்த்து விட்டே கமல் விஸ்வரூபத்தில் பூஜாவை நடிக்க வைத்தார். இதுவரை திருமணம் செய்து கொள்ளாத பூஜாவுக்கு இப்போது வயது 35. ஆனாலும் அழகு குறையாமல் விஸ்வரூபத்தில் கவர்ச்சியில் அலற வைக்கப்போகிறார்.