டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் | உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் | ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் பலர் நடிக்க டந்த வருடக் கடைசியில் வெளிவந்த படம் 'புஷ்பா'. இப்படம் உலக அளவில் சுமார் 350 கோடி வசூலித்து பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தமிழகத்தில் 25 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதே சமயம், ஹிந்தியில் நேரடிப் படங்களுடன் போட்டி போட்டு 100 கோடிக்கும் மேல் வசூலித்தது.
இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு கடந்த மாதமே ஆரம்பமாகும் என்றார்கள். ஆனால், சில பல காரணங்களால் படப்பிடிப்பு தள்பிப் போய் வருகிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என படத்தின் இயக்குனர் சுகுமார், நாயகன் அல்லு அர்ஜுன் பேசி வருகின்றனராம். ஹிந்தி ரசிகர்களையும் கவரும் விதத்தில் கூடுதலாக ஏதாவது செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.
இதனிடையே, இரண்டாம் பாகத்திற்காக இயக்குனர் சுகுமாருக்கும், நடிகர் அல்லு அர்ஜுனுக்கும் கூடுதலாக சம்பளம் தர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். இயக்குனருக்கு 50 கோடி வரை சம்பளம், அல்லு அர்ஜுனுக்கு ஹிந்தி உரிமை என பேசி முடித்துள்ளார்களாம். இது அவர்கள் வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகம் என்கிறார்கள். படத்தின் நாயகி ராஷ்மிகாவுக்கும் இரு மடங்கு சம்பளம் என்று சொல்லிவிட்டார்களாம்.