ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் | சிவராஜ்குமார் படம் மூலமாக கன்னடத்தில் நுழைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | 4 வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாக நடித்த கவுரி கிஷன் | பிளாஷ்பேக் : புறக்கணித்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்த ஏவிஎம் | காதலியை திருமணம் செய்தார் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி | மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி | விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை |

மன்மதலீலை படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடிக்கும் படத்தை தெலுங்கு, தமிழில் இயக்குவதாக தகவல்கள் வெளியானது. தற்போது அது அதிகாபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கீரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரிக்கிறார். இது நாகசைதன்யாவின் 22வது படம். வெங்கட்பிரபுவின் 11வது படம். பெயரிடப்படாத இந்த புதிய படம் நாகசைதன்யாவிற்கு முதல் தமிழ் படம் ஆகும். இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம். படத்தில் பணியாற்றும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
இது சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது.
 
  
  
  
  
  
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            