ஆகஸ்ட் மாதமே திரைக்கு வரும் ரஜினியின் ஜெயிலர் | கண்ணீர் அஞ்சலி பேனர் உடன் நடிகர் ஜி.எம்.குமார் | காஷ்மீரில் நில அதிர்வு : சென்னை திரும்பிய விஜய் | மகனை தொடர்ந்து அப்பாவை இயக்கும் மாரி செல்வராஜ் | கிரிக்கெட் பயிற்சியில் ‛அட்டகத்தி' தினேஷ் | ஜீவா - அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் | லியோ படத்தில் நடிக்கிறாரா யு-டியூப்பர் இர்பான்? | ஜெயம் ரவி - ஏஆர் ரஹ்மான் இணையும் பான் இந்திய படம் | மீண்டும் கதை நாயகியான அபிராமி | டி.வி.யில் நேரடியாக வெளியாகும் ஆரி படம் |
சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு நடிகையாக வந்தவர் சாந்தினி தமிழரசன். சாந்தினி தமிழரசன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரெட்டை ரோஜா தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சினிமாவில் நடித்த போது பெரிய அளவில் கவர்ச்சி காட்டாத சாந்தினி தமிழரசன், சமீபகால போட்டோஷூட்களில் கவர்ச்சியில் சற்று அதிகமாகவே தாராளம் காட்டி வருகிறார்.
அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். அந்த வகையில் கருப்பு வெள்ளை உடையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.
சாந்தினி தமிழரசன் புதிதாக 'செல்லம்மா' என்ற தொடரில் ஹீரோயினாக கமிட்டாகியிருந்தார். ஆனால், அவருக்கு பதிலாக வேறொரு மலையாள நடிகை அந்த தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரெட்டை ரோஜா தொடரும் விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்த ப்ராஜெக்ட்டுக்கான தேடலை தீவிரப்படுத்தியுள்ளார்.