சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் ஆகியோர் நடித்துள்ள பிரமாண்ட படம் 'ஆர்ஆர்ஆர்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவருக்குமே ரசிகர்கள் அதிகம் என்பதால், அவர்களால் தியேட்டர்களில் திரை சேதம் ஏற்படாமல் இருக்க ஆணி படுக்கை, முள் கம்பி தடுப்புகள் போன்றவற்றை ஆந்திர திரையரங்க நிர்வாகங்கள் ஏற்படுத்தியுள்ளனர் .
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தியேட்டரில் தொழில்நுட்ப கோளாறு ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் வாக்குவாதம் செய்து, தியேட்டரில் இருந்த கண்ணாடிகளை நொறுக்கி சேதப்படுத்தினர் .மேலும் திரைமுன் அமைக்கப்பட்டிருந்த முள்வேலியையும் தகர்த்தனர். இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் ரசிகர்களை அப்புறப்படுத்தினர்.




