‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் | அடுத்து கொரோனா வந்தால் சென்னை காலி ; பொள்ளாச்சியில் செட்டில் ஆக ஆசை: விஜய் ஆண்டனி | சாய் பல்லவிக்கு எழுதப்பட்ட கதையில் நடித்த சமந்தா | ஆர்யா 40 : படப்பிடிப்பு நிறைவு | ஜூன் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | எவ்வளவு காலம் முடியுமா அவ்வளவு காலம் கார் ரேஸ் : அஜித் பேட்டி | 'கருப்பு' - இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் | ரூ.230 கோடி வசூலைக் கடந்த 'பெத்தி' |

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் இரண்டாவது சிங்கிளான 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் யு டியூபில் வெளியிடப்பட்டது.
வெளியான 15 நிமிடங்களில் இப்பாடல் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். அனிருத் இசையில் கார்த்திக் எழுதியுள்ள இந்தப் பாடலை விஜய் பாடியுள்ளார். பனி விழும் அரங்கில் விஜய், பூஜா ஹெக்டே நடனமாமடும் விதத்தில் இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது.
பல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ள ஜானி இப்பாடலுக்கும் நடனம் அமைத்துள்ளார். கோவாவில் இருப்பவர்கள் அணியும் ஆடைகள் போல விஜய், பூஜா மற்றும் குழுவினர் ஆடை அணிந்திருக்க ஒரு ஜாலியான பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது.
கடந்த மாதம் வெளியான 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளான 'அரபிக்குத்து' தற்போது யு டியுபில் 200 மில்லியனை நெருங்க உள்ளது. அப்பாடல் போலவே இந்த 'ஜாலியோ ஜிம்கானா' பாடலும் அதிகப் பார்வைகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.