மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் |
சினிமா இசை ரசிகர்களிடம் கடந்த சில வாரங்களாக அதிகம் பேசப்பட்ட பாடல் 'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்ற 'அரபிக்குத்து' பாடல். அந்தப் பாடல் கடந்த மாதம் பிப்ரவரி 14ம் தேதி யு டியூபில் வெளியானது. அடுத்தடுத்து சில பல புதிய சாதனைகளைப் படைத்த பாடல் தற்போது 200 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
நேற்று மாலை 'பீஸ்ட்' படத்தின் இரண்டாவது சிங்கிளான 'ஜாலியோ ஜிம்கானா' வெளியான போது 'அரபிக்குத்து' பாடல் 197 மில்லியன் பார்வைகளில் இருந்தது. 'ஜாலியோ'வை கேட்ட பின் 'அரபிக்குத்து'வையும் மீண்டும் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள் போலிருக்கிறது.
இப்போது 'அரபிக்குத்து' 200 மில்லியன் பார்வைகளையும், 'ஜாலியோ ஜிம்கானா' 10 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது. இந்தப் படத்தின் பாடல்களை யு டியுபில் நிறையவே பிரமோஷன் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
முந்தைய விஜய் படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தின் வியாபார எல்லையை விரிவாக்க என்னவெல்லாம் செய்ய முடியுமா அதை படக்குழுவினர் செய்துவருவதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.