'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால் - சாய் தன்ஷிகா இன்று நிச்சயதார்த்தம் | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' |
கன்னடத் திரையுகத்தின் முக்கியமான சினிமா குடும்பம் மறைந்த நடிகர் ராஜ்குமார் குடும்பம். அவரது மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், சமீபத்தில் மறைந்த புனித் ராஜ்குமார். நேற்று கர்நாடக மாநிலம், சிக்பலப்பூர் நகரில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சிவராஜ்குமார், “ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் மற்றொரு பக்கம் துக்கமாகவும் இருக்கிறது. அப்பு (புனித்) மறைவின் துக்கத்தில் இருக்கிறோம். நான் ராஜமவுலியின் பெரிய ரசிகர். ஜுனியர் என்டிஆர், ராம்சரண், பவன் கல்யாண், சிரஞ்சீவி, விஜய், அஜித் ஆகியோரது படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன். படங்களை எனக்கு வீட்டில் பார்ப்பது பிடிக்காது, தியேட்டர்களில்தான் பார்ப்பேன். தென்னிந்திய சினிமாவை இந்திய அளவில் கொண்டு சென்றவர் ராஜமவுலி. 'ஆர்ஆர்ஆர்' படத்தை முதல் நாள் முதல் காட்சியில் கண்டிப்பாகப் பார்ப்பேன்,” என்று பேசினார்.
'ஆர்ஆர்ஆர்' படத்திற்கான வெளியீட்டிற்கு முந்தைய மேலும் சில நிகழ்வுகள் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.