நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் |
சின்னத்திரை நடிகர் விஷ்ணு விஜய் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் 'இது சொல்ல மறந்த கதை' என்ற தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதேசமயம் ஜீ தமிழின் சத்யா-2 தொடரிலும் விஷ்ணு விஜய் ஹீரோவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விஷ்ணு விஜய் சமீபத்தில் கூறிய போது, 'தொலைக்காட்சியில் வெவ்வேறு வேடங்களில் நடிப்பது பெருமையாக இருக்கிறது' என கூறியுள்ளார்.
மேலும், 'இது சொல்ல மறந்த கதையில், என்னுடைய கதாபாத்திரம் அர்ஜூன். இந்த தொடரில் முக்கியமானதே எனக்கும் மகளுக்குமான உறவு தான். அர்ஜூன் - அக்ஷரா உறவு என்பது தெறி படத்தை நினைவூட்டுவது போல இருக்கும். தெறி படத்தில் விஜய் மற்றும் நைனிகா பேபி போல இதில் அர்ஜூனும் அக்ஷராவும் பேசப்படுவார்கள்' என கூறியுள்ளார்.