பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய படம் மங்காத்தா. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் மீண்டும் தொடங்கப்படுமா என்று தொடர்ந்து அஜித்தின் ரசிகர்கள் வெங்கட் பிரபுவிடத்தில் கேள்வி விடுத்து வருகிறார்கள்.
இது குறித்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், மங்காத்தா-2 படத்திற்கான கதை எப்போதோ தயாராகி விட்டது. அதனால் அஜித் எப்போது அழைத்தாலும் உடனடியாக அந்த படத்தை தொடங்குவதற்கு தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ள வெங்கட்பிரபு, விஸ்வாசம் படத்திற்கு பிறகு வலிமை வரை அஜித்குமார் சென்டிமென்ட் கதைகளாக நடித்து வருகிறார். அந்த வகையில் மங்காத்தா- 2 அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதையாக உருவாகி இருக்கிறது. அவரது அழைப்புக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.




