இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்தில் காமெடியனாக நடிக்கிறார். இது தவிர மேலும் சில படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டுள்ளார்.
இந்த நிலையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு ஒரு பாடல் பாடியிருப்பதாக அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். அதோடு இதற்கு முன்பு எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்டு கேட்கும், வாடி பொட்ட புள்ள வெளியே உள்ளிட்ட சில சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கும் வடிவேலு இதுபோன்று டிராப் சாங் பாடியதில்லை. முதன்முறையாக ஒரு புதிய முயற்சியை இந்தப் படத்தில் அவர் எடுத்துள்ளார். இந்த பாடல் கண்டிப்பாக சூப்பர் ஹிட்டாகும் என்றும் சந்தோஷ் நாராயணன் தெரிவிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.