தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில், அனிருத் இசையில் வெளியாகியிருக்கும் அரபி குத்து பாடலை இதுவரை 126 மில்லியனுக்கும் அதிகமானோர் க ண்டு ரசித்து உள்ளார்கள். அதோடு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த பாடலுக்கு அமோகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதையடுத்து ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் உள்ளிட்ட பாடல்களுக்கு பல சினிமா பிரபலங்கள் நடனமாடி வீடியோக்கள் வெளியிட்டு வந்ததை அடுத்து இப்போது அரபி குத்து பாடலுக்கும் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் ஷிவானி நாராயணனும் அரபி குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இவர் தற்போது விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ், பம்பர் படங்களைத் தொடர்ந்து பொன்ராம், ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படம் என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.