நயன்தாராவிற்கு ஆதரவு அளித்தது ஏன்? - நடிகை பார்வதி விளக்கம்! | பிளாஷ்பேக் : ஓவிய நாயகன் ஒளியின் நாயகனான பின்னணி | திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் | ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் |
பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி இயக்குனர் சங்க தேர்தலுக்கு முன்பு "தயாரிப்பாளர்களுக்கும், பெப்சிக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பெப்சி தொழிலாளர்கள் புதிய சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாம்" என்று அறிவித்தார். இதனை அப்போதே தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி மறுத்தார்.
இயக்குனர் சங்க தேர்தலில் ஆர்.கே.செல்வமணியும், அவரது அணியினரும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சம்பளத்தைதான் தொழிலாளர்கள் பெற வேண்டும், புதிய சம்பளம் குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் இடையிலான தொழிலாளர்கள் சம்பளம் மற்றும் பொதுவிதிகளுக்கான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை முடிந்த பிறகு இருதரப்பினரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுகின்றனர்.
மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் அமலாக்கப்படும் வரை படப்பிடிப்பு மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சம்பளத்தை மட்டுமே தயாரிப்பாளர்கள் கொடுக்க வேண்டும். தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இணைக்கப்பட்டுள்ள சங்கத்தின் உறுப்பினர்கள், புதிய சம்பளத்தை தர வேண்டும் என்று தயாரிப்பாளர்களை வற்புறுத்தக்கூடாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.