சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! | பிள்ளையார்சுழி போட்ட பிரேமி: மனம் திறந்த பிரியதர்ஷினி | நயன்தாராவிற்கு ஆதரவு அளித்தது ஏன்? - நடிகை பார்வதி விளக்கம்! | பிளாஷ்பேக் : ஓவிய நாயகன் ஒளியின் நாயகனான பின்னணி | திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் | ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை |
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான போர் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த போரில் அமெரிக்க ராணுவம் எப்போது வேண்டுமானாலும் குதிக்கலாம் என்கிற சூழ்நிலையில் தமிழ் நடிகை ஒருவர் அமெரிக்க ராணுவத்தில் இணைந்திருக்கும் தகவல் ஆச்சர்யத்தை உண்டாக்கி இருக்கிறது.
கடந்த ஆண்டு வெளிவந்த காதம்பரி என்ற படத்தில் அறிமுமானவர் அகிலா நாராணயன். அதன்பிறகு பல படங்களில் பின்னணி பாடிய இருக்கிறார். அடிப்படையில் நடன கலைஞராகவும் இருக்கிறார். இவர் பெற்றோருடன் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். அந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர். அங்கேயே சட்டம் படித்த அகிலா அமெரிக்க ராணுவத்தின் சட்ட ஆலோசகராக பொறுப்பேற்றிருக்கிறார்.
கடுமையான ராணுவ பயிற்சியில் தேர்ச்சி பெற்ற பிறகு அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தில் இந்திய நடிகை, அதுவும் தமிழ் நடிகை இளம் வயதிலேயே உயர் பொறுப்புக்கு வந்திருப்பது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அகிலாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.