இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
லிங்குசாமி இயக்கும் தெலுங்கு படம் தி வாரியர். தமிழிலும் தயாராகிறது. ராம்பொத்தனேனி, கீர்த்தி ஷெட்டி நடிக்கும் இந்த படத்தில் ஆதி வில்லனாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
இந்த படத்தில் ஆதியின் கேரக்டர், ஹீரோவான ராம்பொத்தேனி கேரக்டருக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முதலில் விஜய்சேதுபதிதான் நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்னை காரமாக ஆதி தேர்வானார். ராம்பொத்தனேனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், ஆதி குரு என்கிற தாதாவாக நடிக்கிறார். இருவருக்கும் இடையிலான மோதல் தான் படம்.
சிவராத்திரியை முன்னிட்டு நேற்று ஆதியின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர். ஏற்கெனவே கீர்த்தி ஷெட்டி நடிக்கும் விசில் மகாலட்சுமி கேரக்டர் வெளியிடப்பட்டது. அடுத்ததாக அக்ஷரா கவுடாவின் கேரக்டர் தோற்றம் வெளியிடப்படுகிறது. அக்ஷரா கவுடா ஆதியின் ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் இந்தி மற்றும் தமிழ் வெளியீட்டு உரிமம் ஏற்கெனவே விற்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.