இம்மார்ட்டல் படம் குறித்து பகிர்ந்த இயக்குனர் | 'கர' படத்தில் வில்லத்தனம் கலந்த தனுஷ் | பராசக்தி படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க வேண்டியது : சுதா | சுந்தர் சி, விஷால் படத்திற்கு ‛புருஷன்' என தலைப்பு | ரூ. 31 கோடி வசூலைக் கடந்த சிறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்' | சாய் பல்லவியைப் பாராட்டிய அமீர்கான் | ‛காந்தாரா' நாயகி சப்தமி கவுடாவின் படம் தமிழிலும் ரிலீஸாகிறது | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் |

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவகுமார். இவர் அழகிய கண்ணே என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இதனை எஸ்தல் எண்டர்டெய்னர் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்குகிறார்.
லியோ சிவக்குமார் ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். சிங்கம்புலி, இயக்குநர் ராஜ்கபூர், காதல் சுகுமார், விஜய் டிவி ஆன்டிருவ்ஸ் , அமுதவானன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் விஜய்சேதுபதியும், இயக்குநர் பிரபுசாலமனும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.
என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்திருக்கிறார். ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது படத்தின் படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் தொடங்கி உள்ளது.