அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? |
அஜித்துக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் சுத்தமாக இல்லை. இதனை பலமுறை அவர் அறிவித்து விட்டார். தனது ரசிகர்கள் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் இணைந்து செயல்படுகிறார்கள் என்பதை அறிந்த அவர் ரசிகர் மன்றத்தையே கலைத்து விட்டார். "அரசியலில் எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு. அதை யார் மீதும் திணிப்பது இல்லை. மற்றவர்கள் கருத்தை என் மீது திணிக்க விட்டதும் இல்லை. எனக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை" என்று அவர் தெளிவாக கூறிவிட்டார்.
என்றாலும் அவ்வப்போது அவர் அரசியலுக்கு வருவார் என்று யாராவது கிளப்பி விடுவார்கள். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டியளித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர், அரசியலுக்கு அஜித் வருவார். இதுகுறித்து அவர் அம்மாவுடன் பேசி இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
இது நேற்று வைரலாக பரவியது. இதை தொடர்ந்து அஜித்தின் செய்தி தொடர்பாளரும், மேலாளருமான சுரேஷ் சந்திரா கூறுகையில் "அஜித்குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இல்லை. எனவே ஊடகத்தினர் இதுபோன்ற தவறான தகவல்களை உக்குவிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.