2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா | சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் |
வினோத் இயக்கத்தில் அஜித் குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு, சுமித்ரா உள்பட பலர் நடித்துள்ள படம் வலிமை. அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் பல அதிரடியான சண்டை காட்சிகள் மற்றும் பைக் ரேஸ் சாகசங்களையும் செய்துள்ளார் அஜித். அதனால் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் வெளியிட தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டுள்ளார். வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ள வலிமை படம் இந்தியா மட்டுமின்றி சில வெளிநாடுகளிலும் வெளியாக உள்ள நிலையில் ஜப்பானில் வலிமை படத்திற்காக முன்பதிவு தற்போது தொடங்கி இருக்கிறதாம்.