உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' |
கொரோனா மற்றும் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கடந்த சில வாரங்களாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இதையொட்டி 2 நாட்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
லதா மங்கேஷ்கருக்கும் நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்தாருக்கும் நெருக்கமான பாசமலர் உறவு இருந்துள்ளது. லதா மங்கேஷ்கரை விட சிவாஜி கணேசன் ஒரு வயது மூத்தவர். இருவரும் சம காலத்து கலைஞர்கள் என்பதால், சிவாஜி கணேசன், லதா மங்கேஷ்கர் இடையே நல்ல நட்புறவு இருந்துள்ளது. சிவாஜி கணேசனின் ஒவ்வொரு பிறந்த நாளையொட்டி (அக்டோபர் 1)லதா மங்கேஷ்கர் சமூக வலைதளங்களில் வாழ்த்து சொல்ல தவறியது இல்லை.
கடந்த ஆண்டு லதா மங்கேஷ்கர் தனது சமூக வலைதளப் பதிவில், 'நேற்று சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள். நான் அவரை அண்ணா என்றுதான் எப்போதும் அழைப்பேன். அவர் இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற பொக்கிஷம். அவர் என்னை தங்கையாக ஏற்றுக் கொண்டதை நான் பெற்ற பாக்கியமாக கருதுகிறேன். அவரது மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு, அவர்களது சகோதரிகள் என்மீது மிகுந்த அன்பு வைத்துள்ளனர். அவர்களின் வழியே நான் சிவாஜி அண்ணனும், கமலா அண்ணியும் என்னுடன் இருப்பதை உணர்கிறேன். சிவாஜி கணேசன் என்ற இந்த மாபெரும் கலைஞருக்கு எனது கூப்பிய கரங்களுடன் எனது பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.' எனப் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது.
மேலும், சிவாஜி உயிருடன் இருந்த காலம் வரை லதா மங்கேஷ்கர் சென்னை வரும்போதெல்லாம் சிவாஜி வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர்களின் அண்ணன் - தங்கை உறவு அந்த அளவிற்கு பிணைப்புடன் இருந்துள்ளது. இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் மறைவு குறித்து சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் கூறியதாவது:
அனைவருக்கும் வருத்தமான நாள். பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் நம்மை விட்டு போய்விட்டார். இப்போது நடிகர் திலகத்துடன் இருப்பதாக நினைக்கிறேன். அண்ணனும் தங்கையும் ஒன்றாக இருக்கின்றனர் என்றே நினைக்க முடிகிறது. இன்னும் நீண்ட காலத்திற்கு அவர்களின் குரல்கள் நம் மனது மற்றும் நினைவில் இருக்கும். அவரை மறக்கவே முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.